
ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு!
மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் சம்மாந்துறை பிரதேச செயலகம் முன்னின்று செயற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகச் சிறப்பாகச் சேவையாற்றிய பிரதேச செயலகங்களைப் பாராட்டி கௌரவிக்கும் கிழக்கு மாகாணக் கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை கேட்போர் கூடத்தில் இன்று (12.09.2026) நடைபெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கிழக்கு மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சார்பில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. எம். எம். சாபீர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம். ரிபாஸ் ஆகியோர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகம் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் இதுவரை 27 மருத்துவ உதவிகளையும், 20 மருத்துவம் அல்லாத உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்மாந்துறை பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான வழிகாட்டலும், உரிய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து இம்மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக அமைந்தன.இத்தகைய மக்கள் நலப் பணிகள் எதிர்காலத்திலும் தொடரவும், சம்மாந்துறை பிரதேச மக்கள் இதன் பலன்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளவும் இந்தச் சாதனை ஒரு மைல்கல்லாக அமைகிறது.
பிரஜாசக்தி வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆடுகளை கொள்வனவு செய்வதற்கான அழைப்பு


2026 யால போக நெல் கொள்முதல் திட்டத்திற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.



![]() |
|
|
|
|
|
|
|
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் "செயிரி வாரம்" செயற்படுத்துதல்.
"க்ளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்பை பயனுள்ளதும், வினைத்திறனானதுமான முறையில் பயன்படுத்துவதற்கும், அலுவலர்களுக்கு அமைதியான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை உருவாக்குவதும் அவசியமாகும். அதற்கான ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக "செயிரி வாரம்" என பிரகடனப்படுத்தி செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக இந்நிகழ்ச்சித்திட்டமானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் தினத்திலிருந்து 04 ஆம் தினம் வரையில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று(01)சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் செயிரி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலகத்தில் உள்ள ஒவ்வொரு கிளைகளிலும் தேவையற்ற கோவைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதோடு செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிளைகளிலும் பிரதேச செயலாளரினால் ஸ்டிகர்களும் ஒட்டப்பட்டது.
இந் நிகழ்வுகளில் உதவி பிரதேச செயலாளர் வீ.வாஸீத் அஹமட், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மது அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில், பிரதம் முகாமைத்துவ சேவை அதிகாரி எம்.ஏ.சீ.சீனத் உம்மா,உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை வேளையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நிறுவனத்தின் கட்டிடங்களுக்கு உள்ளேயும், வெளியேயும்,இவ் வேலைத்தை நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




















