IAU Unit
உள்ளக விவகாரப் பிரிவு – சம்மாந்துறை பிரதேச செயலகம்
பிரதேச செயலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளை மேலும் வினைத்திறனுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கும் நோக்கில், உள்ளக விவகாரப் பிரிவு (Internal Affairs Unit – IAU) தொடர்பான செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் சேவைகள்...
🔹பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை முறையாகப் பெற்று பதிவு செய்தல்.
🔹முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய காலத்திற்குள் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.
🔹 அலுவலக சேவைகளை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் முன்னெடுத்தல்.
🔹அரச அலுவலக நடைமுறைகள் மற்றும் நிறுவன ஒழுங்குமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தல்.
🔹பொதுமக்களுடன் சிறந்த தொடர்பாடலைப் பேணி, தேவையான சேவைகளை விரைவாகவும் சிரமமின்றியும் வழங்குதல்.
🔹அலுவலகப் பணியாளர்களிடையே பொறுப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை மேம்படுத்துதல்.ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
“ நேர்மையான அரச சேவை – திருப்தியான மக்கள்”
தொடர்புகளுக்கு
☎️0672260293
📧This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

📮https://iaum.presidentsoffice.gov.lk/complaints/qr-form/UV1LA
Internal Affairs Unit – IAUDivisional Secretariat – Sammanthurai















