ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு!

மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகம் திறம்படச் செயல்பட்டு கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

​கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய சேவைகளின் ஊடாக, மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத உதவிகளைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதில் சம்மாந்துறை பிரதேச செயலகம் முன்னின்று செயற்பட்டுள்ளது.​

இது தொடர்பாக, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகச் சிறப்பாகச் சேவையாற்றிய பிரதேச செயலகங்களைப் பாராட்டி கௌரவிக்கும் கிழக்கு மாகாணக் கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை கேட்போர் கூடத்தில் இன்று (12.09.2026) நடைபெற்றது.​

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கிழக்கு மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் முதலிடம் பெற்ற சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.​

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சார்பில் பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் வி. வாசித் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. எம். எம். சாபீர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி எம். ரிபாஸ் ஆகியோர் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டனர்.​

சம்மாந்துறை பிரதேச செயலகம் ஜனாதிபதி நிதியத்தின் கீழ் இதுவரை 27 மருத்துவ உதவிகளையும், 20 மருத்துவம் அல்லாத உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.​சம்மாந்துறை பிரதேச செயலாளரின் அர்ப்பணிப்பான வழிகாட்டலும், உரிய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியும் பொதுமக்களின் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலித்து இம்மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக அமைந்தன.​இத்தகைய மக்கள் நலப் பணிகள் எதிர்காலத்திலும் தொடரவும், சம்மாந்துறை பிரதேச மக்கள் இதன் பலன்களை முழுமையாகப் பெற்றுக்கொள்ளவும் இந்தச் சாதனை ஒரு மைல்கல்லாக அமைகிறது.

Download Bid Document 

பிரஜாசக்தி வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆடுகளை கொள்வனவு செய்வதற்கான அழைப்பு 

 
 
பொதுமக்கள் சேவை வழங்குவதன் வினைத்திறனினை உறுதிப்படுத்தும் ஒருமைப்பாட்டுடனான அரச சேவை ஒன்றிற்காக அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நாம் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதனை முன்னணிப் பணி ஒன்றாகக் கருதுதல் வேண்டும் என்பதுடன் அதற்கு அவசியமான ஊக்குவிப்பினையும் மற்றும் அர்ப்பணிப்பினையும் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே சகல அரச உத்தியோகத்தர்களின் மனதிலும் தோற்றுவித்தல் மிகவும் பிரதான விடயமாகும்.
 
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 2026 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01)காலை 8.30 மணிக்கு சம்மாந்துறை  பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது. 
 
முன்மாதிரியாக செயற்படல், ஊக்கமளித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றமுறும் தேவைகளைப் பலமுள்ளதாக உறுதிப்படுத்துவதினூடாக சமூகமொன்றின் நடத்தைமுறையிலான மாற்றங்களை ஏற்படுத்தும் பலமான அணுகுமுறையொன்றை அடையக்கூடியதாக இருக்கும். 
 
இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும், ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் வீடமைப்பு செயற்திட்டத்திற்கான காசோலை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது என்பதோடு பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் வெளியிடப்பட்ட "நினைவூட்டல் குறிப்பேடும்" ( Call up dairy) உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வீ.வாஸீத் அஹமட்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுஸைன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே றினோஸா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்,உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

2026 யால போக நெல் கொள்முதல் திட்டத்திற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.

 

          WhatsApp Image 2025 09 01 at 4.06.47 AM

          WhatsApp Image 2025-09-08 at 3.23.04 AM.jpeg

 

 

 

  WhatsApp Image 2025-09-08 at 3.23.04 AM (1).jpeg 

  WhatsApp_Image_2025-09-01_at_3.47.14_AM.jpg

 WhatsApp Image 2025 09 01 at 3.47.13 AM

 

 

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் "செயிரி வாரம்" செயற்படுத்துதல்.

"க்ளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்பை பயனுள்ளதும், வினைத்திறனானதுமான முறையில் பயன்படுத்துவதற்கும், அலுவலர்களுக்கு அமைதியான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை உருவாக்குவதும் அவசியமாகும். அதற்கான ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக "செயிரி வாரம்" என பிரகடனப்படுத்தி செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக இந்நிகழ்ச்சித்திட்டமானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் தினத்திலிருந்து 04 ஆம் தினம் வரையில் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று(01)சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் செயிரி வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச செயலகத்தில் உள்ள ஒவ்வொரு கிளைகளிலும் தேவையற்ற கோவைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டதோடு செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிளைகளிலும் பிரதேச செயலாளரினால் ஸ்டிகர்களும் ஒட்டப்பட்டது.
இந் நிகழ்வுகளில் உதவி பிரதேச செயலாளர் வீ.வாஸீத் அஹமட், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்  கலாநிதி ஏ.எல் முஹம்மது அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில், பிரதம் முகாமைத்துவ சேவை அதிகாரி எம்.ஏ.சீ.சீனத் உம்மா,உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை வேளையில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நிறுவனத்தின் கட்டிடங்களுக்கு உள்ளேயும், வெளியேயும்,இவ் வேலைத்தை நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

குடியுரிமை சாசனம்

Scroll To Top