பொதுமக்கள் சேவை வழங்குவதன் வினைத்திறனினை உறுதிப்படுத்தும் ஒருமைப்பாட்டுடனான அரச சேவை ஒன்றிற்காக அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நாம் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதனை முன்னணிப் பணி ஒன்றாகக் கருதுதல் வேண்டும் என்பதுடன் அதற்கு அவசியமான ஊக்குவிப்பினையும் மற்றும் அர்ப்பணிப்பினையும் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே சகல அரச உத்தியோகத்தர்களின் மனதிலும் தோற்றுவித்தல் மிகவும் பிரதான விடயமாகும்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 2026 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01)காலை 8.30 மணிக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
முன்மாதிரியாக செயற்படல், ஊக்கமளித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றமுறும் தேவைகளைப் பலமுள்ளதாக உறுதிப்படுத்துவதினூடாக சமூகமொன்றின் நடத்தைமுறையிலான மாற்றங்களை ஏற்படுத்தும் பலமான அணுகுமுறையொன்றை அடையக்கூடியதாக இருக்கும்.
இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும், ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் வீடமைப்பு செயற்திட்டத்திற்கான காசோலை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது என்பதோடு பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் வெளியிடப்பட்ட "நினைவூட்டல் குறிப்பேடும்" ( Call up dairy) உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வீ.வாஸீத் அஹமட்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுஸைன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே றினோஸா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்,உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















